வாலி ராமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்ட வானரங்கள் அனைத்தும் பயந்து அங்கும் இங்கும் ஓடின.
"சுக்ரீவனை அரசனாக்க வாலியை ராமன் கொன்றான்.அதனால் உங்களுக்கு ஆபத்து இல்லை.யாருக்கும் பயம் வேண்டாம்"என்றாள் தாரை.
பின், தாரை, வாலி கிடக்கும் இடத்திற்குச் செல்லப் புறப்பட்டாள்.ஆனால் வானரங்கள், "அங்கதனுக்கு பட்டம் சூட்டலாம்.சுக்ரீவனும், ராமனும் வராது ஊரைக் காப்போம்; என்றனர்.
"வாலி இறந்த பின் எனக்கு ஏதும் தேவையில்லை' என்ற தாரை, ராம லட்சுமணன் இருந்த இடத்திற்குச் சென்றாள்.தரையில் விழுந்து கிடந்த வாலியைப் பார்த்து கதறினாள்.அங்கதனும் உடன் வந்து, தந்தையின் நிலை கண்டு அழுதான்.
ஹனுமான், தாரைக்கு ஆறுதல் கூறினான்.'அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்வோம்.இப்போது வாலிக்கு செய்ய வேண்டிய உத்தரகிரியைகளை செய்வோம்' என்றெல்லாம் ஆறுதல் சொன்னான்.
"அங்கதனைக் காப்பாற்றுவதும், வாலிக்கு உத்தரகிரியைச் செய்வதும் இனி சுக்ரீவன் வேலை.'என்றாள் தாரை.
நினைவிழந்து, மரணிக்கும் தறுவாயில் இருந்த வாலி, கண்களைத் திறந்து சில வார்த்தைகளைப் பேசினான்.
"தம்பி சுக்ரீவா...நாம் ஒன்றாக இருந்து ராஜ்ஜியத்தை ஆண்டிருக்கலாம்..இதில் என் தவறே அதிகம்.இனி பேசுவதில்
பயனில்லை.இனி, நீ அரசாள்வாய்.எங்களது உயிரான அங்கதனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.அவன் வீரன்.எனக்குப் பதிலாக நீயே அவனுக்குத் தந்தையாய் இருந்து அவனை அன்புடன் பார்த்துக் கொள்..தாரை மிகவும் அறிவாளி.அவள் யோசனையையும் தட்டாதே..இந்திரன் எனக்குத் தந்த தங்கமாலையை இனி என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதிக சக்தியைப் பெற்று விளங்குவாயாக!உன் மீது எனக்கு கோபம் தணிந்துள்ளது" என்று கூறி சுக்ரீவனை ஆசிர்வதித்தான்.
தனது மகன் அங்கதனைக் கூப்பிட்டு, :"அங்கதா..சுக்ரீவனுக்கு சரியாக, பொறுமையாக நடந்து கொள்' என்றான்.
வாலியின் மார்பில் குத்தப்பட்டிருந்த பாணத்தை மெல்ல எடுத்தனர்.ரத்தம் பெருக..வாலி உயிர் இழந்தான்.
சுக்ரீவன், தன் தவறை உணர்ந்தான்.'என் புத்தி கெட்டு விட்டதால் தான் நன்கு ஆ.லோசிக்காமல் வாலி புகுந்த குகை வாசலை மூடிவிட்டு வந்தேன்' என வருத்தப்பட்டான்.
சுக்ரீவனை கெடுத்தது ஆசை...வாலியைக் கெடுத்தது கோபம்..
'என்னை கொல்லாமல் , நான் பெரும் குற்றம் செய்த போதும்...ஒடிப் போ! உயிர் பிழைத்துப் போ' என்று சொன்னான் அண்ணன் வாலி.ஆனால் நானோ அவனை கொன்று விட்டேன்.இறக்கும் போதும் ராஜ்ஜியத்தையும், இந்திரன் தந்த தங்கமாலையையும் தந்த மகான் அவன்' என்றெல்லாம் எண்ணினான் சுக்ரீவன்.
தாரையிடம் ராமன் மெல்லச் சென்றான்.தாரை ராமனிடம், "எந்த பாணத்தால் என் கணவனைக் கொன்றாயோ..அதே பாணத்தால் என்னைக் கொன்று என் கணவன் இருக்குமிடம் அனுப்பி வை.நான் இல்லாமல் சுவர்க்கத்திலும் அவர் சந்தோசப்படமாட்டார்.பெண்ணைக் கொல்வது பாவம் என எண்ணாதே! கணவனையும், மனைவியையும் ஒன்று சேர்த்த புண்ணியம் உன்னைச் சேரும்' என்றாள்.
@@@@@@@@@@@@@@ @@@@@@@@@@@
சுக்ரீவன் முதலானோர் கிஷ்கிந்தையில் சுகமாகக் காலம் கழித்தனர்.மழைக்காலம் ஆரம்பித்தது.மழைக்காலம் முடியும் வரை சீதையைத் தேடும் வேலை தடைப்பட்டது.ராமன் மிகவும் துக்கப்பட்டான்.
இறைவன் அமைத்திருக்கும் மறதி என்னும் சக்தி மனிதர்களுக்கு மிகவும் பெரிய செல்வம்.இல்லையேல், துயரத்துக்கு மேல் துயரம் மனிதனுக்கு வாழ்நாளில் ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.இந்த நியமப்படி சுக்ரீவன், தாரை, அங்கதன் அனைவரும் வாலி மறைந்த துக்கத்தை மறந்து இன்பத்துடன் வாழலாயினர்.
ஆனால், ஹனுமான் மட்டும், ராமனின் காரியத்தை மறக்கவில்லை.மழைக்காலம் முடிந்ததும் சுக்ரீவனிடம் அவன் ஒருநாள் சென்றான்.
No comments:
Post a Comment