மரத்தில் மறைந்தபடியே சீதையின் காதுகளில் மட்டுமே விழுமாறு மெதுவாக பேசலானான் ஹனுமான்.
'தசரத மகாராஜா கோசல தேசத்தை ஆண்டான்.அவன், யாரையும் வெறுக்காதவன்.யாரையும் துன்புறுத்தாதவன்.யாருக்கும் தீமை செய்யாதவன்.அவனது நான்கு குமாரர்களில் மூத்தவன் ராமன்.மிகுந்த அறிவாளி.தருமத்தில் பற்று உடையவன்.பட்டத்துக்கு உரியவன்.ஆனாலும், தன் தந்தை கொடுத்த வாக்கு தவறக்கூடாது என எண்ணி, தன் மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் வனம் சென்று அங்கு வசித்து வந்தான்.வனவாசத்தின் போது பல கொடிய அரக்கர்களை அழித்து, ரிஷிகளைக் காப்பாற்றினான்.கரன், தூஷணன் ஆகிய அரக்கத் தலைவர்களை அழித்தான்.அதனால்,அவனை பழி வாங்க எண்ணிய ராவணன், ராம லட்சுமணன் இல்லாதபோது ராமனின் மனைவி சீதையை தூக்கி எடுத்துச் சென்று விட்டான்.ராமன், சுக்ரீவன் என்னும் வானரத்தை அடைந்து, அவனுக்கு வானர ராஜ்ஜியத்தை ஏற்படுத்திக் கொடுத்தான்.சுக்ரீவன், தன் வானர வீரர்களை நாலாபக்கமும் சீதையைத் தேட அனுப்பினான்.அதில் நானும் ஒருவன்.சம்பாதி கூறியதைக் கெட்டு, கடலைத் தாண்டி வந்தேன்.ராமன் சொன்ன சீதையை இப்போது காண்கிறேன்'
ஹனுமான் சொல்வதை நிறுத்திக் கொண்டான்.
ஹனுமான் சொன்னவற்றைக் கேட்ட சீதை பரவசமானாள்.யார் இவற்றையெல்லாம் சொல்வது என நாலா பக்கமும், மேலும், கீழும் பார்த்தாள்.மேலே மரத்தில் ஒரு வானரத்தைக் கண்டாள்.ஹனுமான் மரத்திலிருந்து இறங்கி சீதை முன்னர் கைகூப்பி வணங்கி நின்றான்."தாயே! தாங்கள் யார்? ராவணனால் பலாத்காரமாக தூக்கிவரப்பட்ட சீதாதேவியா நீங்கள்?ராமனின் மனைவியார் சீதாதேவியைப் பார்த்த பாக்கியம் பெற்றவனா நான்..?" என்றான்.
சீதையும் பரவசத்துடன், "நான் தான் சீதை.என்று ஆரம்பித்து, தசரதன் பற்றியும், தான் ராமனை மணந்தது,கைகேயி பெற்ற வரம்,ராமன்..தன்னுடனும்.லட்சுமணனுடனும் வனம் வந்தது, ராவணன் அவர்கள் இல்லாதபோது சீதையை தூக்கிவந்தது, இப்போது அசோக வனத்தில் சிறை வைத்துள்ளது..என் எல்லாவற்றையும் கூறினாள்,ராவணன் விதித்துள்ள கெடு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது.அது முடிந்ததும் நான் உயிர் நீப்பேன்' என்றாள்.
"தாயே! ராமன் தான் என்னை அனுப்பியுள்ளான்.உமது நிலை குறித்து லட்சுமணனும் துயரப்பட்டு தன் வணக்கத்தைச் சொல்லச் சொன்னான். என்ற ஹனுமான், சீதையைக் கண்ட ஆனந்தத்தாலும். சீதையின் துயரத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் அவளது அருகில் வந்து நின்றான்.
சீதை இப்போது மீண்டும் பயந்தாள்."நான் ஏமாந்தேன்.நீ ராவணன்தான். முன்னால் சந்நியாசியாய் வந்தாய்.இப்போது வானரமாய் வந்துள்ளாய்.உடனே விலகிப் போ" என்றாள்.
பிறகு மீண்டும் யோசித்தாள்.இவன் ராவணனாக இருக்க முடியாது என எண்ணியவள், ஆனால்..கடலைத் தாண்டி வந்தேன் என்பதை எப்படி நம்புவது என மௌனமாய் இருந்தாள்.
ஹனுமான், சீதையின் பயத்தையும், சந்தேகத்தையும் உணர்ந்தான்.இப்போது, சீதையின் உள்ளத்தில் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என எண்ணினான்.ராமனைப் போற்றிப் பேசினான்.என்னை சந்தேகிக்க வேண்டாம்..என்னை நம்புங்கள் என்றான்.
"வானரனே! நான் உன்னை சந்தேகித்ததைக் கொண்டு வருந்த வேண்டாம்.நீ எப்படி ராமனை சந்தித்தாய்? உங்களிடம் எல்லாம் ராமன் எப்படி நட்புக் கொண்டான்..என்பதையெல்லாம் சற்று விளக்குவாயாக" என்றாள். சீதை.
ஹனுமான், நடந்ததையெல்லாம் கூறி, தான் கொண்டுவந்திருந்த கணையாழியைக் காட்டினான்.
கணையாழியைக் கையில் வாங்கிய சீதை மிகவும் மகிழ்ச்சியுற்றாள்.'உன்னை நான் சந்தேகித்தேனே!" என வருந்தினாள்.
வாயுபுத்திரனான ஹனுமான் தான் யார் என்பதையும், தன் பிறப்பைப் பற்றியும் கூறினான்."வாயுபகவான் அருள் பெற்றவன் நான்.உமது துக்கத்தைத் தீர்க்காமல் என்னைப் பற்றி பெருமையாய் பேசக்கூடாது என்றாலும் உம் சந்தேகத்தைப் போக்கவே பேசினேன்.ராமனும், லட்சுமணனும் வானரப்படைகளுடன் வந்து இந்நாட்டை நிர்மூலம் செய்வர்" என்றான்.
No comments:
Post a Comment