ராமன், சுக்ரீவனிடம், "சுக்ரீவா! ஹனுமான் லங்கை நகருக்குள் புகுந்து சீதையை கண்டு வந்துள்ளான்.ஆனால்..நாம் இப்போது எப்படி கடலைத் தாண்டப் போகிறோம்? ராவணனின் நகரத்தை அடைய முதலில் நாம் கடலைத் தாண்ட வேண்டும் அல்லவா? " என்றான்.
உடன் சுக்ரீவன், " ராமா! மனத்தளர்ச்சி அடைய வேண்டாம்.உனக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக வானரங்கள் உள்ளனர்.உம்மையும், தம்பி லட்சுமணனையும் லங்கைக்குக் கொண்டு சேர்ப்பது எங்கள் காரியம்.முதலில், கடலைத் தாண்டுவது பற்றி யோசிப்போம்.என, வானர வீரர்களின் சக்தி அறிந்து அவர்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்." என்றான்.
பின் ராமன் லங்கை நகரம், அதன் கோட்டை, அரண் ஆகியவற்றை ஹனுமான் சொல்லக் கேட்டுக் கொண்டான்.
ராவணனின் சேனை பலம்,கோட்டையின் பலம், அரண்மனைகளின் அமைப்பு,காவல் காக்கும் படைகள், கல்லெறி யந்திரங்கள்.மதில் சுவர்கள், வாயில்கள்,அகழிகள்,அவற்றின் மேல் வேண்டும்போது இறக்கவும், ஏற்றவும் மரப்பாலங்கள் எல்லாம் பற்றி ஹனுமான் விவரமாகச் சொன்னான்.
திருகூடமலையும், லங்கா நகரமும்..யாரும் நெருங்க முடியாதவாறு ராவணனால் காக்கப் பட்டு வருகிறது. ஆனாலும், அவர்கள் அனைவரையும் அழிக்கும் சக்தி நமக்கு உண்டு.அங்கதன்,த்விவிதன்,மயிந்தன்.ஜாம்பவான்,பனசன்.நளன், நீலன் போன்ற நிகரற்ற வீரர்கள் உள்ளனர்.நல்லநேரம் பார்த்து கிளம்ப உத்தரவு மட்டுமே தேவை" என்றான் ஹனுமான்.
உத்தர பங்குனி நட்சத்திரத்தன்று சுபமுகூர்த்ததில் அனைவரும் புறப்பட்டனர். :நாம் புறப்பட்டது தெரிந்தால் சீதை தைரியம் அடைவாள்" என்றான் ராமன்.
வானரப் படை வேகமாக மலைகளையும், காடுகளையும் தாண்டிச் சென்றது.ராமனையும், லட்சுமணனையும் வானரப் படையினர் தூக்கிச் சென்றனர்.
நீலனும், குமுதனும் சேனைக்கு முன் புறம் வழியை சோதித்துக் கொண்டு சென்றனர்.பின்னால் சிறந்த வீரர்கள் வந்தனர்.மத்திய பாகத்தில் ராம லட்சுமணர்களும், சுக்ரீவனும் இருந்தனர்.
மகேந்திரமலை வந்ததும், ராமன் மலையின் மீது ஏறி கடலைப் பார்த்தான்."இதை எப்படி கடப்போம் என யோசிப்போம்' என்றான்.கடற்கரை வனத்தில் படை தங்கிற்று.
ராமன், லட்சுமணனைப் பார்த்து"பிரியமான ஒரு பொருளை இழந்துவிட்டால், நாளடைவில் அதன் நினைவுகளும், பிரிந்த துயரமும் குறைந்துவிடும் என்கிறார்களே..ஆனால் சீதையின் பிரிவில் நான் இதைக் காணவில்லையே!" என்றாள்.
"ராமா! துக்கப்படாதே..ராவணனை வதம் செய்து சீதையை வெற்றியுடன் அயோத்திக்கு அழைத்துச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது'என லட்சுமணன் ஆறுதல் கூறினான்.
No comments:
Post a Comment