Thursday, 7 August 2014

68- சீதையும், ஹனுமானும்



சீதை ஹனுமானை நோக்கி. "நீ கொண்டு வந்துள்ள செய்தி கேட்டு மகிழ்வதா, துக்கப்படுவதா எனத் தெரியவில்லை.ராமன் என்னை மறக்கவில்லை.என்னைத் தேடுகிறார் என்ற செய்தி எனக்கு ஆனந்தம் தருகிறது.என்னையே நினைச்சு அவர் துக்கப்படுவது என் துக்கத்தை அதிகப்படுத்துகிறது..மனிதர்களை சந்தோஷமும், துக்கமும் இரு கயிறுகளாகக் கட்டி இழுக்கின்றன.நாங்களும் இந்த இயற்கை விதிக்குக் கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும்.ராமன் எப்போது வருவார்..ராவணனையும், இலங்கையையும் எப்போது வதம் செய்வார்.எனக்கு ராவணன் வைத்த கெடு இன்னமும் இரண்டு மாதங்களே உள்ளன,.இதை ராமனிடம் சொல்.ராவணனை நல்வழிக்குக் கொண்டு வர அவனது தம்பி விபீஷணன் முயன்றான்.அவன் முயற்சி பயனற்றுப் போயிற்று.ராவணன் அழியப் போவது நிச்சயம்'' இவ்வாறு சீதை பேசிக் கொண்டே போனாள்.

ஹனுமானும், :தாயே! இப்போதே ராமனை அழைத்து வருவேன்.பெரும் சேனையுடன் ராமன் வருவான்.உமக்கு இஷ்டமானால் இப்போதே என் முதுகில் அமர்ந்து வாருங்கள்.ராமனிடம் சேர்க்கிறேன்.ராவணனுடன் லங்கை முழுவதையும் தூக்கி ராமன் காலடியில் கொண்டு சேர்ப்பேன்.இதுவும் என்னால் முடியும்" என்றான்.

ஹனுமான் சொன்னதைக் கேட்ட சீதை ஆச்சரியமடைந்தாள்.சிறிய வானரம்..நீ என்னை எப்படி சுமப்பாய்.என்றாள்..ஹனுமான் , தன் உருவத்தைப் பெருக்கி, தனது விஸ்வரூபத்தைக் காட்டினான்.

"மாருதியே! உன் சக்தியை உணர்ந்தேன்.ஆனால், நீ என்னை எடுத்துப் போவது சரியில்லை.என்னை நீ எடுத்துச் செல்லுகையில் அரக்கர்கள் உன் மீது பாய்வார்கள்.அவர்களிடமிருந்து நீ என்னையும் சேர்த்துக் காக்க வேண்டியிருக்கும்.தவிர, நீ என்னை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றால், என் ராமனின் வீரத்திற்கு அது இழுக்காகும்.ராவணனை எதிர்த்து பொரிட்டு என்னை மீட்டால்தான் ராமனுக்குப் பெருமையாகும்.ராவணன் திருட்டுத்தனமாய் என்னை எடுத்து வந்தான்.அதே போல ராமன் செய்வது சரியாகாது.ராவணனிடம் போர் செய்து என்னை அடைய வேண்டும்" என்றாள் சீதை.

"நான் போய் ராமனிடம் என்ன சொல்ல வேண்டும்?உம்மைக் கண்டு நான் பேசியதற்கு என்ன அடையாளம்" என்றான் ஹனுமான்.

இதைக்கேட்டு சீதைக்கு பழைய நினைவுகள் வந்து கண்ணீர் பெருகியது.தனக்கும், ராமனுக்கும் மட்டுமே தெரிந்த சில அந்தரங்க நிகழ்ச்சிகளைச் சொன்னால், தன்னைக் கண்டதற்கு அடையாளம் ஆகும் என சில விஷயங்களைக் கூறினாள்.

"ஒருநாள் நானும், ராமனும் சித்திரக்கூடத்தில் அமர்ந்திருந்தோம் .என் மடியில் அவர் சாய்ந்து உறங்கிக்கோண்டு இருந்தார்.அப்போது ஒரு காக்கை என் மார்பைக் கொத்தி தொந்தரவு செய்தது.நான் அதை ஓட்டியும் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்தது.சிறு கல்லை எடுத்து வீசினேன்.அப்போதும் அது கேட்கவில்லை.ராமன் எழுந்ததும், என் கண்களில் நீர் ததும்பியிருப்பதைக் கண்டார்.முதலில் சிரித்த அவர், பின் என் உடல் காக்கையால் கொத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அது காக்கை அல்ல,அசுரன் என்பதை உணர்ந்து தன் அஸ்திரத்தை எடுத்து வீசினார்.அது காக்கையை துரத்திச் சென்றது.கடைசியில் அந்த அசுரன் அதிலிருந்து தப்பிக்க முடியாது ராமனின் கால்களில் விழுந்து சரணாகதி அடைந்தான்.பிழைத்தான்.இதை ராமனிடம் சொல்" என்றாள்.

:மற்றுமொரு சமயம் நானும், ராமனும் நடந்து சென்றபோது மிகவும் களைத்துப் போய் , வியர்வை வழிய, என் நெற்றியிலிருந்த திலகம் கரைந்து போயிற்று.ராமன், வேடிக்கையாக ஒரு மலைப்பாறையிலிருந்து செந்தாதுவைத் தேய்த்து, தானே என் முகத்தில் இட்டார்.இது அவருக்கு நினைவில் இருக்கிறதா" என்று கேள்.

ராமனுக்கு நான் ஏதேனும் சொல்ல வேண்டுமா? என்ன.அவன் அறியாதது என்ன இருக்கிறது? ராமனின் பக்கத்தில் லட்சுமணனும் இருக்கிறான்.களங்கமற்ற பரிசுத்த உள்ளம் கொண்டவன்.வனத்திற்கு, எங்களுடன் வந்து, என்னைத் தாயாக பாவித்தவன்.அவனும் என் துயரை அகற்ற வேண்டும் என்று சொல்.(லட்சுமணன் மீது அநியாயமாக தான் குற்றம் சாட்டியதை, சீதை இங்கு எண்ணியிருக்க வேண்டும்.)

இறுதியில், என் விவாக காலத்தில் என் தாய் எனக்குக் கொடுத்து, தசரத மகாராஜா என் தலையில் சூடிய சூடாமணி.இதை ராமனிடம் அடையாளமாகத் தருவாயாக!' என்றபடியே சீதை தன் தலையிலிருந்த சூடாமணியை அகற்றி மாருதியிடம் தந்தாள்.

மாருதியே..நீதான் ராமனுக்குச் சரியாகச் சொல்லி அவனுக்கு வெற்றியை சம்பாதித்துத் தர வேண்டும்.ராமனுக்கும், லட்சுமணனுக்கும்,சுக்ரீவனுக்கும் மற்ற வானரத் தலைவர்களுக்கும் என் அன்பைச் சொல்' என முடித்தாள் சீதை.

"தாயே! நான் போய்ச் சொன்னதுமே..அவர்கள் அனைவரும் உடன் கிளம்பி வருவார்கள்.தைரியமாக இர்க்கவும்" என்று சீதை வனங்கி மாருதி விடை பெற்றான்.

No comments: