Monday, 8 September 2014

79-வானரங்களின் சந்தேகம்




கும்பகர்ணன் தன் அண்ணன் ராவணன் தவறிழைத்தான் எனத் தெரிந்ததும், அதை தைரியமாக அவனிடம் சொன்னான்.மேலும், அண்ணன் மீதான ஆதீத பாசத்தால், ராமனை உனக்காக வதம் செய்வேன் என்றான்.

ஆனால், விபீஷணனோ, தன் அண்ணனுக்கு அறிவுரை சொன்னான்.அதற்கு ராவணன் செவி சாய்க்கவில்லை.இருப்பினும், தன்னை குலத்துரோகி என்றாலும் பரவாயில்லை என தர்மத்திற்கு துணை போகவில்லை.

கடலில், வடக்குக் கரையில் இருந்த வானரத் தலைவர்கள், திடீரென ஆகாயத்தில் ஒரு ஜோதி போல ஐந்து ராக்ஷசர்கள் நிற்பதைக் கண்டார்கள்.சுக்ரீவனும் அதைப் பார்த்தான்.உடன், "நம்மைக் கொல்ல லங்கையிலிருந்து வந்திருக்கிறார்கள்' என்றான்.வானரவீரர்கள்' உத்தரவு கொடுங்கள் அவர்களை வதம் செய்கிறோம்" என்றார்கள்.

ஆனால், மேலிருந்து விபீஷணன் பேசலானான்..

"ராவணனின் தம்பி விபீஷணன் நான்.சீதையை பலாத்காரமாக தூக்கி வந்தவன்.அதைத் தடுத்த ஜடாயூவைக் கொன்றவன் ராவணன்"நீ செய்த காரியம் தகாது .சீதையை ஒப்படைத்து மன்னிப்புக் கேள்" என நான் வற்புறுத்தியும் அவனின் அழிவுக்காலம்வந்து விட்டதால் நான் சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை.சபையில் என்னை அவமானப்படுத்தி விட்டான்.நாடு, நகர், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு நாங்கள் ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்' என்றான்.

அதைக் கேட்ட சுக்ரீவன் ராமனிடம் சொன்னான்.

"இந்த அரக்கர்கள் பல வேஷம் போடுவார்கள்.இவனை நாம் நம்பக் கூடாது.இது ராவணனின் சூழ்ச்சிதான்.இவனை வதம் செய்வதே நலம்.மாறாக சேர்த்துக் கொண்டோமாயின் நாளை நம்மை அழித்துவிடுவார்கள்'

சுக்ரீவனின் வார்த்தையைக் கேட்ட ராமன், ஹனுமான் முதலிய மற்ற வானரங்கள் என்ன சொல்கின்றன என விரும்பிக் கேட்டான்.

அங்கதன் சொன்னான், "பகைவனிடமிருந்து இவன் வந்துள்ளான்.இவனை தள்ளிவிடுவது நியாயமாகாது.சேர்த்துக் கொண்டாலும் அபாயம் உண்டாகலாம்.இவன் எப்படி நடந்து கொள்கிறான் என்று பார்ப்போம்.நமக்கு சந்தேகம் வரும் வகையில் நடந்தால் அழிப்போம் அவர்களை" என்றான்.

சபரன் சொன்னான் - "இவனை இப்போது சேர்த்துக் கொள்வது நல்லதல்ல.நமக்குள் சாமர்த்தியசாலிகள் இவனை பரிட்சித்து விட்டு முடிவுக்கு வரலாம்

ஜாம்பவான் சொன்னான் - வஞ்சக எண்ணத்தில் இவர்கள் வந்திருந்தால் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.ராவணனின் கூட்டம் வஞ்சகக் கூட்டம்.அதனால் இவர்களை நாம் சேர்த்துக் கொள்ளக்கூடாது

மயிரந்தன் சொன்னான் - சந்தேகத்தின் பேரில் ஒருவனைத் தள்ள வேண்டாம்.ராவணனைத் துறந்துவிட்டு வந்ததாகக் கூறுகின்றான்.இவனிடம் பேசிப்பார்த்து .பின் முடிவெடுக்கலாம்.

இவர்கள் பேச்சை எல்லாம் கேட்ட ராமன் ஹனுமான் என்ன சொல்கிறான் என அவனைப் பார்த்தான்.  

No comments: