லங்கையில் ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டுத் தலைவனை இழந்து அழுகுரல் ஒலித்தது.
ராவணனுக்கு, துக்கம்,வெட்கம்,கோபம்...இனி தானே முழு பலத்துடன் போராட வேண்டும் என தீர்மானித்தான்.
எட்டுக் குதிரைகள் பூட்டிய..எல்லாவித ஆயுதங்களும் நிறைந்த தனது தேரில் ஏறினான்..அவன் புறப்பட்டதும்..பறவைகள் கொடூரமாகக் கூவின.சூரிய ஒளி மங்கிற்று.இன்னும் பல கெட்ட சகுனங்கள் தோன்றின.ராவணன் இதையெல்லாம் பொருட் படுத்தவில்லை.வடக்குக் கோட்டை வழியே சென்றான்.விரூபாக்ஷன், மகோதரன்,மகாபார்சவன் என் அரக்க வீரர்கள் அவனைத் தொடர்ந்தனர்.
அவனைத் தொடர்ந்த வீரர்கள், சுக்ரீவனாலும், அங்கதனாலும் வீழ்த்தப்பட்டு இறந்தனர்.
லட்சுமணன் ராவணனை எதிர்த்தான்.ராவணன் அவனை லட்சியம் செய்யாமல், லட்சுமணனின் அம்புகளை தனது அம்புகளால் அகற்றிவிட்டு ராமனை நோக்கி நேராகச் சென்று தாக்கினான்.ராவணன் விடுத்த அம்புகளை ராமன் தடுத்தான்.
ராவணனின் அம்புகள் ராமனின் நெற்றியில் பட்டும் அவை அவனை சேதப்படுத்தவில்லை.அதே போன்று ராமன் விடுத்த அம்புகள் ராவணனையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ராவணனின் அஸ்திரங்கள் கண்டு ராமன் வியந்தான்.
ராவணனின் அங்கங்களையெல்லாம் ராமனின் அம்புகள் துளைத்தன.
பின்னர், லட்சுமணனும், விபீஷணனும் ராவணனைத் தாக்கினர்.ராவணன் விபீஷணனைக் கொல்ல ஒரு சக்தி ஆயுதத்தை வீசி எறிந்தான்.அதை விபீஷணனைத் தாக்குவதை லட்சுமணனை தடுத்தான்.மறுமுறை ஒரு சக்தி ஆயுதத்தை ராவணன் , லட்சுமணன் மீது வீச ,அது அவனை நினைவிழக்கச் செய்தது.ஆனால் உயிர் போகவில்லை.
இதைக்கவனிக்காமல் ராமன், ராவணனை பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தான்.வானர வீரர்கள் லட்சுமணனின் உயிரைக் காக்க , ஹனுமானை வடக்கே மூலிகை கொண்டுவர மலைக்கு அனுப்பினர்.ஆனால், எந்த மூலிகைகள் எனத் தெரியாததால் ஹனுமான் மலையையேத் தூக்கி வந்தான்.பின், லட்சுமணன் மீண்டும் நினைவு பெற்று, போரில் வந்து கலந்து கொண்டான்.
இதனிடையே, இந்திரன் தன் தேரை மாதலி ர்ன்னும் சாரதியோடு ராமனுக்கு அனுப்பினான். பின் அற்புத யுத்தம் நடந்த்து.ராவணன் மிகவும் அடிபட்டு, மனம் தளர்ந்து, மயக்கமானான். அவனது சாரதி தேரை யுத்தபூமிக்கு வெளியே கொணர்ந்தான்.
மயக்கம் தெளிந்த ராவணன், "போர்க்களத்திலிருந்து தேரை வெளியே ஏன் கொண்டு வந்தாய்?" என சாரதியை கோபித்துக் கொண்டு மீண்டும் களத்திற்கே விடச் சொன்னான்.
ராமன் தேர் முன்னர் வந்து நின்ற ராவணன் மீண்டும் ராமனுடன் மோதினான்.மறுபடியும் கடுமையான யுத்தம்.அஸ்திரத்திற்குப் பிரதியஸ்திரம் என நீண்ட நேரம் இருவருக்கும் யுத்தம் நடந்தது.
ராமனின் தேரோட்டி மாதலி ராமனிடம் மெதுவாக,"அரக்கனின் முடிவு காலம் வந்து விட்டது.தாமதிக்க வேண்டாம்.பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தவும்" என்றான்.
ராமன், திவ்வியாஸ்திரத்தை உரிய மந்திரங்களைச் சொல்லி செலுத்தினான்.அதுவரையில் எத்தனையோ முறை ராவணனின் தலைகள் அறுபட்டாலும் புதிய தலைகள் முளைத்துக் கொண்டே இருந்தன.பிரம்மாஸ்திரமானது நெருப்புடன் ராவணனை நோக்கிச் சென்று அவனது மார்பை துளைத்தது. ராவணனின் கைவேல் கீழே விழுந்தது.அவன் உயிரற்று தேரிலிருந்து கீழே விழுந்தான்.
ஜெயபேரிகை முழங்கியது.ஆகாயத்திலிருந்து பூ மாரி பொழிந்தது.லட்சுமணன், விபீஷணன் , ஜாம்பவான் ஆகியோர் மகிழ்ச்சி மேலிட ராமனை சூழ்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment