அரண்மனைக்குள் இருந்த ராவனனுக்கு, வானரப்படையினர் கோட்டையைத் தாக்கத் தொடங்கிய செய்தி எட்டியது.சில அரக்கர்கள் ராவணனிடம், "சுக்ரீவன் தலைமையில் வானரப்படை கோட்டையைத் தாக்குகிறார்கள்.ராம லட்சுமணன் உயிருடன் உள்ளனர்.இந்திரஜித் அவர்களைக் கட்டிய நாக அம்புகள் வீணாகின' என்றனர்.
விஷ நாக அம்புகளிலிருந்து தப்பினரா..அப்போது ஆபத்துதான் என்ற ராவணன் தூம்ராக்ஷனைக் கூப்பிட்டு, "நீ இருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்?நீ படையுடன் போய் அவர்களை அழித்துவிட்டு வா" என்றான்.தூம்ராக்ஷனும் மகிழ்ச்சியுடன் சேனையுடன் கோட்டைக்கு வெளியே சென்று வானரங்களுடன் மோதினான்.இரு பக்கங்களிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது.முடிவில் தூம்ராக்ஷன் ஹனுமானால் கொல்லப்பட்டான்.
இந்தத் தோல்வியால் கோபமுற்ற ராவணன் வஜ்ரதம்ஷ்ட்ரனை தெற்கு வாயிலில் இருந்த அங்கதனை அழிக்க அனுப்பினான்.அவன் தலைமையில் சென்ற அரக்கர்களால் பல வானரங்கள் மாண்டன.பின் அவனும், அங்கதனும் நேருக்கு நேர் போரிட்டனர்.முடிவில் வஜ்ரதம்ஷ்ட்ரன் கொல்லப்பட்டான். அரக்கர்கள் படை சிதறி ஓடியது.
ராவணன், பிரஹஸ்தனை அழைத்து, "யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனனை, திறமை மிக்க வானர வீரர்களை அழைத்துக் கொண்டு, ராமனை அழிக்க செல்லச் சொல்" என்றான்.
அகம்பனன் தலைமையில் ஆயுதங்களுடன் பெரும் படை புறப்பட்டது அவர்களை, வானர வீரர்களான குமுதன்,நளன்,மயிந்தன், துவிவிதன் ஆகியோர் எதிர்த்தனர்.
வானர வீரர்கள் பலர் தாக்கப்பட்டு ஓடினர்.அப்போது ஹனுமான் அங்கு வந்து சேர்ந்தான்.அவன் ஒரு பெரிய பாறையை எடுத்து அகம்பனன் மீது எறிந்தான்.அகம்பனன் தன் அம்பால் அப்பாறையை பொடிப் பொடியாக்கினான்>உடன் ஹனுமான், தன் உடலை பெருக்கிக் கொண்டு, ஒரு பெரிய மரத்தை வேருடன் பிடுங்கி அவனைத் தாக்கினான்.அகம்பனன் இதனால் கொல்லப்பட, மீதமிருந்த அரக்க வீரர்கள் கோட்டைக்குள் ஓடி புகுந்து கொண்டனர்.
அகம்பனன் இறந்ததை அறிந்த ராவணன் மறுபடியும் நகரத்தின் காப்பு நிலையைச் சுற்றிப்பார்த்துவிட்டு பிரஹஸ்தனுடன் பேசினான்.
"சேனையுடன் வெளியேச் சென்று பலமான யுத்தம் செய்தால் தான் நாம் வெல்ல முடியும்.நான், கும்பகர்ணன்,நீ, இந்திரஜித், நிகும்பன் ஆகிய ஐவர்களுள் ஒருவர் இந்த பொறுப்பை ஏற்று கொண்டு கோட்டையை விட்டு வெளியே சென்று யுத்தம் செய்ய வேண்டும்' என்றான்.
இதைக் கேட்ட பிரஹஸ்தன், "சீதையைத் திருப்பித் தருவதே நலம் பயக்கும்.இதை நான் முன்னமே சொன்னேன்.ஆனாலும் நான் உமக்குக் கடன் பட்டுள்ளேன்.என் உயிர், பொருள்.குடும்பம் அனைத்தையும் இழக்கத் தயார்.நானே சேனையுடன் செல்கிறேன்' என்றான்.
பெரும் சேனை தயாரானது.பிறகு பேரிகை முழக்கத்துடன் பிரஹஸ்தன் புறப்பட்டான்.இந்த அரக்கப் படை தெற்கு வாயிலில் இருந்த வானரப் படையுடன் மோதியது.
"அவன் யார்?" என்றான் ராமன்,
"அவன் பிரஹஸ்தன்.ராவணனின் சேனாதிபதி.லங்கா சேனையில் மூன்றில் ஒரு பகுதி இவன் வசம்"என்றான் விபீஷணன்.
பிரஹஸ்தனின் வீரர்களான, நராந்தகன்,மகாநாதன்,கும்பஷன் முதலியவர்களைத் துவிவிதன்,துர்முகன், ஜாம்பவான் ஆகியவர்கள் கொன்றனர்.
பிரஹஸ்தனுக்கும், நீலனுக்கும் கடும் போர் நீண்ட நேரம் நடந்தது.நீலன் ஒரு பெரிய பாறையை பெயர்த்தெடுத்து, பிரஹஸ்தன் தலையை நொறுக்கி விட்டான்.அரக்கர் படை சிதறி ஓடியது.
நீலன், பிரஹஸ்தனைக் கொன்றதைக் கேட்ட ராவணனுக்கு கோபம் பொங்கிற்று,"இந்திரனையும், அவன் தேவப்படைகளையும் வெல்ல வல்லவனான என் சேனாதிபதி கொல்லப்பட்டானா? இனியும் அலட்சியம் செய்ய முடியாது.நானே செல்கிறேன்' என்று கூறி தேரில் நகரத்தை விட்டு வெளியேறினான் ராவணன்.
ராவணன் தலைமையில் அரக்கர் படை வந்ததைக் கணடதும் ராமனிடம் விபீஷணன், "தசமுகன்..ராவணன் அவன்தான்' என்றான்.
ராவணன் பல வீரர்களைத் தாக்கி வீசினான்.நீலன் ராவணனை எதிர்த்தான்.அக்கினி அஸ்திரத்தால் நீலனை நினைவிழக்கச் செய்தான் ராவணன்.உடன் ஹனுமான் வந்து ராவணனை எதிர்த்தான்.பின், ராவணனுக்கும், லட்சுமணனுக்கும் போர் நடந்தது.லட்சுமணனும் நினைவிழக்க, அவனை ராமனிடம் தூக்கி வந்தான் ஹனுமான்.
பின், ராமனே ஹனுமானின் தோளில் அமர்ந்தபடியே ராவணனை எதிர்த்தான்."ராவணன் கிரீடம் இழந்து,தேர் இழந்து,ஆயுதம் இழந்து நிராயுதபாணி ஆனான்.
"நன்கு யுத்தம் செய்தாய்.இன்றுபோய் ஓய்வெடுத்து கொண்டு நாளை ஆயுதங்களை எடுத்து கொண்டு வா" என்றான் ராமன்.
ராவணன் அவமானத்துடன் திரும்பினான்,
No comments:
Post a Comment