அயோத்தியிலிருந்து தாம் அழைத்து வந்த் ராஜகுமாரர்களை மிதிலையில் தசரதனிடம் ஒப்படைத்து விட்டு விசுவாமித்திரர் இமயமலைக்குச் சென்றார்,(ராம சரிதத்தில் விசுவாமித்திரர் பங்கு இத்துடன் முடிந்தது)
தசரதர் அனைவருடன் அயோத்தி திரும்புகையில் ஓரிடத்தில் அப சகுனங்கள் தென்பட்டன. வசிஷ்டரும்' கெட்ட நிமித்தங்கள் உள்ளன..ஆனாலும் பயம் வேண்டாம்' என்றார்.
அப்போது பயங்கரமாகக் காற்று வீசியது.மரங்கள் வீழ்ந்தன.நகரம் இருண்டது...சிறிது நேரத்தில் க்ஷத்திரியர் கூட்டத்திற்கு எமனாய் திகழ்ந்த பரசுராமர் வந்து நின்றார்.
தோளில் வில்லும், கோடாரியும், கையில் அம்பும், தலை ஜடையுமாய் பரசுராமர் தோற்றமளித்தார்.
ஜமதக்னி முனிவரின் குமாரரான பரசுராமர், தந்தை ஒரு அரசனால் கொல்லப்பட்டதற்காக க்ஷத்திரிய குலத்தையே அழிப்பதாக சபதம் செய்து நூற்றுக்கணக்கான அரசகளை ஹதம் செய்து சினம் தணிந்தவரானவர்.அவர் மீண்டும் வரக் காரணம் என்ன? என அனைவரும் பயந்தனர்.
அவரோ ராமனை நோக்கி, 'ஜனகரின் தனுசை நீ வளைத்துவிட்டாய்.அது ஒடிந்தது குறித்து கேள்விப் பட்டேன்.இதோ என்னுடன் இருக்கும் வில்.என் தந்தை ஜமதக்னி அடைந்த விஷ்ணு தனுசு.இதை வளைத்து நாண் ஏற்று..பாணமும் தருகிறேன்.நாம் யுத்தம் செய்வோம்' என்றார்.
தசரதனோ, எப்படியாவது அவரிடமிருந்து ராமனை காக்க எண்ணினார்.
அவர் பரசுராமரை நோக்கி, ' க்ஷத்திரியரிடம் உமக்கு இருந்த கோபம் தணிந்து விட்டது அல்லவா? என் மகன் சிறுவன்.அவனுடன் நீர் யுத்தம் செய்யலாமா?ராமனிடம் நாங்கள் உயிரையே வைத்துள்ளோம்.அவனை நீர் வதம் செய்து விட்டால் நாங்களும் மடிவோம்' என்றார்.
ஆனால் பரசுராமரோ,'இரண்டு சிறந்த வில்கள் விஸ்வகர்மாவால் செய்யப்பட்டன.ஒன்று திரிபுரத்தை எரித்த திரியம்பகனுக்குத் தரப்பட்டது.மற்றொன்று திருமாலுக்குத் தரப்பட்டது.இது விஷ்ணு தனுசு. நீ முன்னால் வளைத்தது சிவ வில்,.இதையும் வளைத்தால் தான் உன் வீரியம் தெரியும்.அப்போது நாம் யுத்தம் செய்யலாம்' என்றார் ராமனை நோக்கி.
ராமன் பரசுராமரிடம்' உமது தந்தை ஜமதக்னி கொல்லப்பட்டதால் நீர் பலரை பழி வாங்கினீர்.அதில் நான் குற்றம் காணவில்லை.ஆனால் நீர் என்னை அடக்க முடியாது' என்று கூறியபடியே, வில்லையும், அம்பையையும் அவரிடமிருந்து வாங்கி வில்லை வளைத்து அம்பை வைத்த் நாண் ஏற்றினான்.
ராமன் வில்லை வளைத்ததும் பரசுராமர் முகம் வாடியது.அவரது அவதார சக்தி மறைந்தது.அவர் ராமனை நோக்கி' நீர் யார் என்பதை அறிந்தேன். உன் கையிலிருக்கும் அம்பிற்கு என் தவத்தின் பயன் முழுதும் இரையாகும்' என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார்.
No comments:
Post a Comment