Friday, 21 March 2014

8- ராமனைக் கேட்டல்


'நான் ஒரு வேள்வி நடத்துகிறேன்.அது முடியும் தறுவாயில், மாரீசன்,சுபாஹூ என்னும் இரண்டு அரக்கர்கள் அதை கெடுத்து வருகிறார்கள்.அவர்களது தேக பலமும்,யுத்தப் பயிற்சியும் அதிகமானவை.என்னாலும், என்னைச் சார்ந்தவர்களாலும்...சாபத்தால் அவர்களை அடக்கிட முடியும்.ஆனால் எங்கள் தவம் கெடக்கூடாது என எண்ணுகிறோம்.ஆகவே அவர்களை அடக்க உங்கள் மூத்தக் கூமாரன் ராமனை அனுப்புவீராக! அவன் அவர்களை வென்று புகழ் அடைவான்' என்றார் விசுவாமித்திரர்,.

தசரதனோ, பயமும், கவலையும் அடைந்தான்.'பதினாறு வயது கூட பூர்த்தியாகாத ராமனை அனுப்பச் சொல்கிறீர்களே..இது சரியான யோசனை அல்ல.நான் என் சேனையைக் கூட்டி வந்து அவர்களை அழிக்கிறேன்' என்றான் தசரதன்.

விசுவாமித்திரரோ, மாரீசனைப் பற்றியும், சுபாஹூ பற்றியும், அவர்களது எஜமானன் ராவணனைப் பற்றியும் கூறி, ராமனையே அனுப்ப வேண்டும் என்றார்.

ராமனை அனுப்ப, தசரதன் மறுக்க, விசுவாமித்திரர் கோபம் அடைந்தார்.

'முதலில் நான்கேட்டதைத் தருவதாக வாக்களித்தீர்.இப்போதோ மறுக்கிறீர்.வாக்குத் தவறி உங்கள் வம்சத்திற்கு துரோகம் இழைக்கிறீர்' என்றார்.

உடனிருந்த வசிஷ்டர் தசரதனை நோக்கி :வாக்குக் கொடுத்தப்பின் அதை நிறைவேற்றாமல் இருப்பது தவறு.அது உனது தான, தரும வேள்விகள் அனைத்தையும் அழித்துவிடும்.ராமனை விசுவாமித்திரருடன் அனுப்புவீராக.உடன் லட்சுமணனையும் அனுப்பவும்.அவர்களை அரக்கர்கள் தீண்ட முடியாது.'என்றார்.

தசரதனும், புத்தித் தெளிந்து அவர்களை அனுப்ப ஒப்புக் கொண்டார்.

அவர்கள் கிளம்பும் சமயம்..சுகமான காற்று வீசியது.ஆகாயத்திலிருந்து பூ மாரி பெய்தது

No comments: