கைகேயியின் பிடிவாதத்தைக் கண்ட மன்னன், அவள் செயலால், தன்னை மரணம் நெருங்கும் என நினைத்தான்.சிறு வயதில் தான் செய்த பாவம் ஒன்று நினைவிற்கு வந்தது.'ரிஷி குமாரனை அறியாமல் கொன்று, அவனது வயோதிகப் பெற்றோருக்கு துக்கம் உண்டாக்கினேன்.அதன் விளைவை அனுபவிக்கிறேன்.புத்திரனை நானும் பிரியும் சோகம் அனுபவித்தால்தான் அந்த பாவம் தீரும் போல இருக்கிறது" என தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டான்.
விடிந்தது.முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டபடியால், வஷிஷ்டரும், அவரது சிஷ்யர்களும் ,பட்டாபிஷேகத்திற்கான பொருள்களை எடுத்துக் கொண்டு அரண்மனை நோக்கி. ராஜ வீதியில் அணிவகுத்தனர்.
நீர்க்குடங்கள்,தானியங்கள்,ரத்தினங்கள்,தேன்,தயிர்,நெய், பொரி,தர்ப்பைப்புல்,சமித்து,புஷ்பம், பால்,கனிகள், யானை, குதிரை,புலித்தோலாசனம் இவையெல்லாம் வாத்தியக் கோஷ்டிகளுடன் செல்வதைக் கண்ட மக்களின் ஆராவாரமும், உற்சாகமும் அதிகமாயின.
வசிஷ்டரை அரண்மனை வாயிலில் சுமந்திரன் வரவேற்றான்.வசிஷ்டர், ;அனைத்து ஏற்பாடுகளும் தயார்.எல்லோரும் மன்னனுக்குக் காத்திருக்கின்றனர்' என்று சொல்ல, சுமந்திரன் மன்னனிடம் சென்றான்.
மன்னன் ஏதும் பேசாதிருக்க, கைகேயி சுமந்திரனிடம்'மன்னன் இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் கழித்துள்ளார்.நீ சென்று ராமனை அழைத்து வா' என்றாள்.
ராமனின் அரண்மனைக்கு வந்த சுமந்திரன், ராமனிடம் கைகேயி அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். ராமன் உடனே மன்னனைக் காண புறப்பட்டான்.
அந்தப்புரத்தில் தந்தையின் நிலையைக் கண்ட ராமன் திடுக்கிட்டான்.தசரதனையும் , கைகேயியையும் பாதம் தொட்டு வணங்கினான்.
'ராமா...' என்ற மன்னன், அதற்கு மேல் பேச்சு எழாமல் திண்டாடினார்..ராமனோ, தந்தை தன்னைக் கண்டதும் ஏன் பேச வில்லை? தான் ஏதேனும் தவறிழைத்து விட்டோமோ என் அஞ்சினான்.தந்தையிடமும் அதைக் கேட்டான்.
அதற்கு கைகேயி, 'அவருக்கு யார் மீதும் கோபமில்லை.மனதில் உள்ளதை சொல்ல பயப்படுகிறார்.முன்னொரு சமயம் எனக்கு அவர் இரு வரங்கள் கொடுத்தார்.அந்த வரங்களை செய்து தீர்க்க வேண்டியது உன் செயலில் உள்ளது.உனக்குச் சொல்ல பயந்து கொண்டு சும்மா இருக்கிறார்.நீ, தந்தையே..நீங்கள் சத்தியத்தை கைவிட வேண்டாம்.நான் செய்து தீர்க்கிறேன் என உறுதி கொடு.பின், விஷயத்தை நான் சொல்கிறேன்' என்றாள்.
அதற்கு ராமனோ, 'என்னைக் குறித்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.தந்தை என்னை நெருப்பில் குதிக்கச் சொன்னாலும், ஏன்? என்று கேட்காமல் விழுவேன்.நான் செய்ய வேண்டியதை ஆணையிடுங்கள். செய்து முடிப்பேன்' என்றான்.
ராமன் இப்படிச் சொன்னதும் கைகேயி மகிழ்ந்தாள்.'ராமா நீ சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தேன்.சம்பரனுடன் உன் தந்தை சண்டையிட்டு காயம் பட்ட நேரத்தில், அவரது உயிரை நான் காப்பாற்றினேன்.அப்போது அவர் எனக்கு இரண்டு வரங்களைத் தந்தார்.நான் அதை அப்போது வேண்டாம்.பிறகுக் கேட்கிறேன் என்றேன்.இப்போது அவற்றைக் கேட்டுப் பெற்றேன்.பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும். இன்றே நீ பதினான்கு ஆண்டுகள் வனம் செல்ல வேண்டும் என்றும் இரு வரங்களை அடைந்துள்ளேன்.உன் பட்டாபிஷேகம் நடைபெற இருந்த, அதே நேரம் பரதன் பட்டாபிஷேகம் நடைபெற வேண்டும்.நடத்திவிடச் சொல். நீ மரவுரி தரித்து வனம் செல்.இதற்கு சம்மதித்தேன் என மன்னனிடம் சொல்' என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தசரதன் உள்ளம் கொதித்தது.ஆனால் ராமன் முகத்தில் வருத்தமே இல்லை.புன்னகையுடன் ராமன்'அப்படியே அன்னையே!' என்றான்.பின்,"தாயே..இதில் எனக்கு வருத்தம் இல்லை.பரதனுக்கு எதையும் நான் கொடுக்கத் தயார்.இதை நேரில் தந்தையே என்னிடம் சொல்ல என்ன தடை.என்ன கூச்சம்?இனியும் தாமதிக்க வேண்டாம்.பரதனை, தூதுவரை அனுப்பி, உடனே வரச்சொல்லுங்கள்' என்றான்.
கைகேயி சந்தோசப்பட்டாள்.ஆனால். அதனால் வரவிருக்கும் துக்கத்தையும், மகனின் இகழ்ச்சியையும் அவள் அறியவில்லை.மன்னனோ பெருங்குரலிட்டு அழுதான்.அரசனையையும், கைகேயியையும் வணங்கிவிட்டு ராமன் வெளியே வந்தான்.
நடந்தவைகளை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த லட்சுமணன் , ராமனுடன் சென்றான்.
ராமன், தன் தாய் கௌசல்யையின் இருப்பிடம் சென்றான்.அவரிடம் தான் வனம் செல்லவிருக்கும் விஷயத்தைச் சொல்ல.
5 comments:
எந்த நிலையிலும் புன்னகை வேண்டும் என்பதை உணர்த்தும் நிகழ்வு...
எளிய நடையில் அருமையான கம்பராமாயண விருந்து.. பாராட்டுக்கள்..!
எளிய நடையில் அருமையான கம்பராமாயண விருந்து.. பாராட்டுக்கள்..!
அருமையான பதிவு.
நன்றி.
vilai mathikka mudiyatha pathivu,intha seyal ungalai nichayam soorgam kooti sellum
Post a Comment