இரவு சரயூ நதிக்கரையில் விசுவாமித்திரர் ராம, லட்சுமணனுடன் தரையில் படுத்து உறங்கினார்.அதற்கு முன் அவர்களுக்கு 'பலம்' அதி பலம்' ஆகிய இரு மந்திரங்களை அவர்களுக்கு உபதேசித்தார்.இந்த மந்திரங்களை சொல்பவனை எந்த தீங்கும் அண்டாது என்றார்.
அடுத்த நாள், அவர்கள் அங்க தேசத்தில் இருந்த காமாசிரமத்தை அடைந்தனர். 'இது பரமசிவன் நீண்டகாலம் தவம் இருந்த இடம்.மன்மதன் சிவன் மீது பாணம் விட்டு, அவரது கோபத்திற்கு ஆளாகி எரிக்கப்பட்ட இடம் ஆகவேதான் காமாசிரமம் எனப் பெயர் பெற்றது என்றார். பின் அவர்கள் கங்கைக் கரையை அடைந்தனர்.
அப்போது நதியில் ஓடம் செல்லும் போது ஒரு இடத்தில் பயங்கர சப்தம் கேட்டது.அது சரயூ நதி கங்கையில் சேருமிடம் என்றார் விசுவாமித்திரர்.
பின் அவர்கள் ஒரு பயங்கரக் காட்டுக்குள் போக நேர்ந்தது.'இது தாடகவனம்.காடாய் இருக்கும் இந்த இடம் ஒருகாலத்தில் செழிப்பாய் இருந்தது.ஒருசமயம், இந்திரன், விருத்திராசுரனைக் கொன்று, பிரம்மஹத்தி தோஷம் அடைந்தான்.அவனது பாபத்தைப் போக்க புண்ணிய நதிகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, இந்திரனை குளிப்பாட்டினர்.அதனால் அவனது மாசு அகன்றது.அந்த மாசு பூமியின் சக்தியால் உரமாகி மிகச் செழிப்பானது அந்த இடம்.பின், சுந்தன் என்னும் யக்ஷனுடைய மனைவி தாடகை என்பவளாலும், அவளது மகன் மாரீசனாலும் இந்த இடம் காடானது.தாடகைக்கு பயந்து இங்கு யாரும் வருவதில்லை.இந்த அரக்கி உன்னால் கொல்லப்பட வேண்டும்' என்றார் விசுவாமித்திரர் ராமனிடம்.
'ஒரு யக்ஷப் பெண்ணுக்கு அவ்வளவு பலமா?' என்றார் ராமன்.
'ஆம்..சுகேது என்ற யக்ஷன், சந்ததி இல்லாமல் இருந்தான்.அவனது நன்னடத்தையையும், தவத்தையும் கண்ட பிரம்மன் அவனுக்கு ஒரு அழகான பெண் மகவைப் பிறக்க வைத்தான். அந்த அழகியப் பெண்தான் தாடகை.அவளுக்கு சுந்தன் என்னும் யக்ஷனுடன் திருமணம் நடந்தது.மாரீசன் பிறந்தான்.
ஒரு சமயம் அகத்தியரின் சாபத்தால் சுந்தன் மரணமடைந்தான், அதனால் கோபமுற்ற தாடகை தன் மகனுடன் சேர்ந்து அகத்தியரை எதிர்த்தாள்.அதனால் அகத்தியர் சாபத்திற்கு ஆளானாள்.அவர்கள் நர மாமிசம் சாப்பிடும் அரக்கர்களானார்கள்.தாடகையும் அழகுப் போய் கோரமானாள்.அதுமுதல் அவர்கள் மக்களை இம்சித்து வருகின்றனர்' என்றார் விசுவாமித்திரர்.
மக்கள் நலத்திற்காக பெண்ணாய் இருந்தாலும் தாடகையைக் கொல்வேன் என்ற ராமன், தனது கோதண்டத்தை வளைத்து நாண் ஏற்றினார்.அந்த சப்தம் வனம் முழுதும் கேட்டது.
தாடகை சப்தம் வந்த இடம் வந்தாள்.ராமன் மீது பாய்ந்தாள்.சிறிது நேரம் கல்மாரி பொழிந்தாள்.கடைசியில் ராமன் விட்ட அம்பு அவள் மார்பைத் துளைத்து அவளை பூமியில் வீழ்த்தியது.
தாடகை இறந்ததும், அந்த வனம் மீண்டும் செழிப்பானது. பின் விசுவாமித்திரருடன், ராமனும், லட்சுமணனும் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர்.

No comments:
Post a Comment